Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தொலைந்துபோன கடன்பற்று அட்டையைப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்திய சந்தேகத்தின்பேரில் பெண் கைது

ஒருவருடைய தொலைந்துபோன கடன்பற்று அட்டையை வைத்துப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்திய சந்தேகத்தின்பேரில் 31 வயதுப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
தொலைந்துபோன கடன்பற்று அட்டையைப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்திய சந்தேகத்தின்பேரில் பெண் கைது

(படம்: AFP/Damien Meyer)

ஒருவருடைய தொலைந்துபோன கடன்பற்று அட்டையை வைத்துப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்திய சந்தேகத்தின்பேரில் 31 வயதுப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தொலைந்துபோன தம்முடைய கடன்பற்று அட்டையைப் பயன்படுத்தி யாரோ அதிகாரபூர்வற்ற பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளதாகக் காவல்துறையிடம் பெண் ஒருவர் புகார் அளித்தார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர், அந்தக் கடன்பற்று அட்டையைப் பயன்படுத்திச் சில பொருள்களை வாங்கியதோடு சில சேவைகளையும் பயன்படுத்தியுள்ளார். மொத்தம் 3,400 வெள்ளியை அவர் அந்த அட்டையின் மூலம் செலுத்தியதாக நம்பப்படுகிறது.

நாளை அந்தப் பெண்ணின்மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும்.

பிறருக்குச் சொந்தமான கடன்பற்று அட்டையை முறைகேடாகப் பயன்படுத்தும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நபருக்கு 2 ஆண்டுச் சிறைத்தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

ஏமாற்று வேலையில் ஈடுபடும் நபருக்கு 10 சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்