Images
  • croc
    (படம்:  PUB)

லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் தென்பட்ட முதலை

சிங்கப்பூர்: லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் முதலை காணப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நீர் விளையாட்டு நடவடிக்கைகளும் மீன்பிடிப்பு நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இன்று (பிப்ரவரி 14) காலை பொதுப் பயனீட்டுக் கழக ஊழியர் ஒருவர் முதலையைக் கண்டதாகக் கழகம் அதன் Facebook பக்கத்தில் குறிப்பிட்டது. தேசியப் பூங்கா வாரியத்தின் உதவியோடு முதலையைப் பிடிக்க முயல்வதாகக் கழகம் கூறியது.

முதலை பிடிபடும் வரையில் பொதுமக்கள் நீர்த்தேக்கத்தின் கரையோரம் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முதலையைக் கண்டால், அமைதியாக அந்த இடத்திலிருந்து பின்னோக்கிச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முதலைக்குப் பக்கத்தில் செல்வது, அதற்குச் சினமூட்டும் வகையில் நடந்துகொள்வது, அதற்கு உணவளிப்பது-ஆகியவற்றைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு கழகம் ஆலோசனை கூறியது.

முதலையைப் பார்ப்பவர்கள் 9632 3261 என்ற எண் மூலம் பொதுப் பயனீட்டுக் கழகத்திற்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

Top