Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமிப்பரவல் சூழலில் ரயில் பயணங்களை அதிகப் பாதுகாப்பானதாக்கப் புதிய முயற்சி

கிருமிப்பரவல் தொடரும் வேளையில், ரயில் பயணங்களை அதிகப் பாதுகாப்பானதாக்கப் புதிய முயற்சி சோதிக்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -
கிருமிப்பரவல் சூழலில் ரயில் பயணங்களை அதிகப் பாதுகாப்பானதாக்கப் புதிய முயற்சி

(கோப்புப் படம்: TODAY)

கிருமிப்பரவல் தொடரும் வேளையில், ரயில் பயணங்களை அதிகப் பாதுகாப்பானதாக்கப் புதிய முயற்சி சோதிக்கப்படுகிறது.

ரயில்களில் உள்ள கூட்டத்தையும் முகக்கவசத்தைச் சரிவர அணியாத பயணிகளையும் அடையாளம் காண உதவும் காணொளிப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நடப்புக்கு வரக்கூடும்.

ரயில்களில் சரிவர முகக்கவசம் அணியாதோரை உடனடியாக அடையாளம் காண உதவுகிறது அந்தத் தொழில்நுட்ப வசதி.

Distributed Intelligent Video Analytics தொழில்நுட்பத்தை ரயில்களில் சோதித்துவருகிறது Thales எனும் பிரெஞ்சு நிறுவனம்.

கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் ரயில்களில் எத்தனை பயணிகள் இருக்கின்றனர் என்பதையும் அந்தத் தொழில்நுட்பம் துல்லியமாகக் காண்பிக்கிறது.

வடகிழக்கு, டௌன்டவுன் (Downtown) ரயில் பாதைகளில் SBS Transit நிறுவனம் இயக்கும் ரயில்களில் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக Thales நிறுவனம் கூறியது.

ரயில் சேவைகளை மேம்படுத்த ஓராண்டுக்குமுன் அது தொடங்கப்பட்டது.

தற்போது இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் செலவுகளைக் குறைவாக வைத்திருக்க நிறுவனம் முற்படுகிறது.

தனியாக விடப்படும் பைகளையும் உதவி தேவைப்படும் சிறப்புத் தேவையுள்ளோரையும் அடையாளம் காண புதிய கட்டமைப்பு கைகொடுக்கும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்