Images
  • mUIS
    படம்: RLAF

கடலூர் இயற்கைச் சீற்றத்தின்போது உதவிய சிங்கப்பூர் அறக்கட்டளை மக்களை நேரில் சென்று நலம் விசாரிப்பு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் கடந்த 2017ஆம் ஆண்டு அடைமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

அந்த மாவட்டத்திற்கு உதவும் வகையில் சிங்கப்பூரின் ரஹ்மதான் லில் அலமின் அறக்கட்டளை உள்ளூர் அறக்கட்டளைகளுடன் இணைந்து நிதி வசூலித்து உதவி செய்தது.

அவ்வட்டார மக்களை அறக்கட்டளையின் உறுப்பினர்கள் இந்த மாதத் தொடக்கத்தில் சென்று நலம் விசாரித்தனர்.

வசூல் செய்யப்பட்ட நிதியில் 15 விழுக்காட்டை உடனடி உதவிக்கு அனுப்பியதாகவும் உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசியத் தேவைகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் உறுப்பினர்கள் கூறினர்.

மீதி நிதி, அவ்வட்டார மக்களின் இயல்பு வாழ்க்கையை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது.

அறக்கட்டளையின் மூலம் 19 கிராமங்களில் 6,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்ததாகக் கூறப்பட்டது.

இயற்கைச் சீற்றத்திலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகளைப் பற்றி கடலூர் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டிருப்பதாக அறக்கட்டளை தெரிவித்தது.

100,000 வெள்ளிக்கு மேல் நிதி வசூலிக்கப்பட்டதாகவும், நிதி வசூலிக்க உதவிய அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் ரஹ்மதன் லில் அலமின் அறக்கட்டளை கூறியது.  

Top