Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முறையாகத் தெரிவிக்காமல் $376,000 ரொக்கத்தைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவந்த ஆடவருக்கு அபராதம்

அதிகாரிகளிடம் முறையாகத் தெரிவிக்காமல் சுமார் 376,000 வெள்ளி ரொக்கத்தைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்ற ஆடவருக்கு 8,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
முறையாகத் தெரிவிக்காமல் $376,000 ரொக்கத்தைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவந்த ஆடவருக்கு அபராதம்

படம்: AFP

அதிகாரிகளிடம் முறையாகத் தெரிவிக்காமல் சுமார் 376,000 வெள்ளி ரொக்கத்தைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்ற ஆடவருக்கு 8,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

49 வயது இந்தோனேசிய ஆடவர் அப்துல் சடார் அஃபாண்டி (Abdul Satar Affandi) வழக்கமான சோதனைகளுக்காக சிங்கப்பூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டார்.

சுங்கத் துறையிடம் தெரிவிக்கத் தேவையான பொருள்கள் ஏதும் தன்னிடம் இல்லை என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரியிடம் கூறிய பின்னர் அவர் தம்முடைய பையை ஊடுகதிர்ச் சோதனைக்கு அனுப்பினார்.

பையில், சிங்கப்பூர் வெள்ளி, இந்தோனேசிய ரூப்பியா, ஆஸ்திரேலிய டாலர்-எனப் பன்னாட்டு நோட்டுகள் ரொக்கமாக அதிக அளவில் இருந்தது அப்போது தெரியவந்தது.

சூதாட்டத்திற்கும் மருத்துவச் செலவுக்கும் அந்தப் பணத்தைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவந்ததாக ஆடவர் கூறினார்.

20,000 வெள்ளிக்கு மேற்பட்ட ரொக்கத்தைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவரும்போது அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்பது தமக்கு தெரியாது என்று ஆடவர் கூறினார்.

அதனையடுத்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், தமது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்த இணங்கினார்.

இருப்பினும், அப்துலிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தை அவரிடமே திருப்பிக்கொடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்