Images
  • curry fiesta (1)
    (படங்கள்: மீனா அறுமுகம், பிரியங்கா பன்னீர் செல்வம்)

200ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் 200 கறிகளுடன் சாதனை

சிங்கப்பூரின் 200ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்க, 200 வகை கறிகள் தயாரிக்கப்பட்டு இன்று சாதனை படைக்கப்பட்டது.


லிஷா பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் Curry Fiesta எனும் நிகழ்ச்சி தற்போது கேம்பல் லேனில் நடைபெறுகிறது.


சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பெற, 200 கறிகளைத் தயாரிக்கும் முயற்சியில் மீடியாகார்ப் செய்தியும் பங்குபெறுகிறது.

'செய்தி'யின் சார்பில் செட்டிநாட்டு மண்டி கறி தயாரிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பிரபல உணவகங்களுடன் சமூக அமைப்புகளும் கலந்துகொண்டன. பாரம்பரிய இந்திய கறி வகைகளுடன் புது வகையான  Sausage கறி, சைவ சுறா கறி போன்றவைத் தயாரிக்கப்பட்டன. தாய்லந்து, ஜப்பான் வகை கறிகளும் இடம்பெற்றுள்ளன.

நாவூறச் செய்யும் பற்பல கறிகளைச் சுவைத்ததுடன் பொதுமக்கள் விளையாட்டுகளிலும் கலந்துகொள்கின்றனர்.


இன்று காலை 11.30 மணியில் இருந்து, மதியம் 2.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது

Top