Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர்களுடன் விளையாடும் பிள்ளை - மகிழ்ச்சி வெள்ளத்தில் இணையவாசிகள்

பிள்ளைகளின் சிரிப்பிற்கும் அன்பிற்கும் மயங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது.

வாசிப்புநேரம் -
வெளிநாட்டு ஊழியர்களுடன் விளையாடும் பிள்ளை - மகிழ்ச்சி வெள்ளத்தில் இணையவாசிகள்

(படம்: Facebook/Itsrainingraincoats)

பிள்ளைகளின் சிரிப்பிற்கும் அன்பிற்கும் மயங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது.

எவ்வளவு சோர்வாக இருந்தாலும் பிள்ளைகளின் சிரிப்பு புதிய உத்வேகத்தைத் தரும் என்று கூடக் கூறலாம்.

அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்று நேற்று நடந்துள்ளது.

Itsrainingraincoats அமைப்பின் Facebook, Instagram பக்கங்களில் அது பற்றி ஒரு பதிவு பகிரப்பட்டது.

மதிய ஓய்வு நேரத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் வேலையை முடித்துவிட்டு உணவருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பிள்ளை அவர்களை நோக்கி ஓடி வந்தது.

வெளிநாட்டு ஊழியர்களும் பிள்ளையை சிரிப்புடன் வரவேற்று அதனுடன் விளையாடினர்.

அதன் பின்னர் ஒரு ரொட்டியையும் ஊழியர்களுடன் இணைந்து பிள்ளை உண்டது.

தமது 1 வயது, 3 வயதுக் குழந்தைகள் வெளிநாட்டு ஊழியர்களுடன் நன்றாக நேரத்தைச் செலவிட்டதாகக் குறிப்பிட்டார் அப்பிள்ளைகளின் தந்தை.

COVID-19 நோய்த்தொற்றுச் சூழலில் குடும்பங்களை விட்டுப் பிரிந்து சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அந்தக் குழந்தையின் சிரிப்பு கட்டாயம் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்று கூறிய இணையவாசிகள் அந்தப் படத்தைப் பகிரிந்து வருகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்