Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பேருந்தும் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்து

செம்பவாங்கில் பேருந்தும் சைக்கிளோட்டியும் சம்பந்தப்பட்ட விபத்தில் 30 வயது சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
பேருந்தும் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்து

படம்: Facebook/Singapore Bus Drivers Community

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

செம்பவாங்கில் பேருந்தும் சைக்கிளோட்டியும் சம்பந்தப்பட்ட விபத்தில் 30 வயது சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

செம்பவாங் வே, செம்பவாங் டிரைவ் ஆகிய சாலைகளின் சந்திப்புப் பகுதியில் அந்தச் சம்பவம் நேற்று முன்தினம்(அக்டோபர் 7) நடந்தது.

சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூகத் தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஆடவர் ஒருவர் சாலையில் குப்புற விழுந்து கிடந்தார். வழிப்போக்கர்கள் அவரைச் சூழ்ந்து காணப்பட்டனர். SMRT சட்டை அணிந்த ஓர் ஆடவரும் அங்கு இருந்தார்.

சுயநினைவோடு அந்த சைக்கிளோட்டி கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்