Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழ்ச்சுடர் 2019: பாரம்பரியமும் நவீனமும் கலந்து ஆடலில் அசத்திச் சென்ற நடனமணிகள்

மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தும் நிகழ்ச்சி தமிழ்ச்சுடர். கல்வி, கலை, புத்தாக்கம், இளம் சாதனையாளர், வாழ்நாள் சாதனையாளர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

வாசிப்புநேரம் -

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, நிகழ்ச்சியின்  இணை ஏற்பாட்டாளர்.

நிகழ்ச்சியில் நடனம் உட்பட இசைப் படைப்புகளும் இடம்பெறுகின்றன.

பாரம்பரியமும் நவீனமும் கலந்து ஆடலில் அசத்திச் சென்ற நடனமணிகளின் படைப்பு, வருகையாளர்களின் விழிகளுக்கு விருந்தாக அமைந்தது.

கோவிந்த் வசந்தாவின் இசையமைப்பிலும் ஐஸ்வர்யா ஜெயகுமாரின் நடன அமைப்பிலும் அது அரங்கேறியது. 

இந்திய நடன அம்சங்களை மற்ற நடன அமைப்புகளுடன் ஒன்றிணைத்து, மாறிவரும் காலங்களை மையமாகக் கொண்டு நடனம் படைக்கப்பட்டது.

நடனமணிகள்: பிரியங்கா சிவபாலன், பிருந்தா சிவபாலன், கல்யாணி ஹேமா நாயர், ஐஸ்வர்யா ஜெயகுமார், கிரிஹலக்ஷ்மி சௌந்தரபாண்டியன்

நுட்பத்தையும், நுணுக்கத்தையும் வெளிப்படுத்தும் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு விருதுகள் தமிழ்ச்சுடர் 2019இல் வழங்கப்பட்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்