Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அமெரிக்கத் தரவு நிலையமான Digital Realtyஇன் ஆகப்பெரிய கிளை சிங்கப்பூரில் திறக்கப்பட்டது

அமெரிக்கத் தரவு நிலையங்களில் ஒன்றான Digital Realtyஇன் ஆகப்பெரிய கிளை சிங்கப்பூரில் நேற்று திறக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அமெரிக்கத் தரவு நிலையமான Digital Realtyஇன் ஆகப்பெரிய கிளை சிங்கப்பூரில் திறக்கப்பட்டது

படம்: Digital Realty Asia

அமெரிக்கத் தரவு நிலையங்களில் ஒன்றான Digital Realtyஇன் ஆகப்பெரிய கிளை சிங்கப்பூரில் நேற்று திறக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அந்நிறுவனம் சுமார் ஒரு பில்லியன் டாலரை முதலீடு செய்யவிருக்கிறது.

Digital Loyang Two அல்லது SIN-12 என்று அழைக்கப்படும் அந்த வளாகம், நீடித்த நிலைத்தன்மையைக் கருத்தில்கொண்டு 50 மெகாவாட் சக்தியைப் பயன்படுத்தும் ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தின் குளிரூட்டும் கட்டுப்பாட்டு முறை தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்க உதவும்.

கட்டட, கட்டுமான ஆணையத்தின் பசுமைச் சான்றிதழ் திட்டத்தின்கீழ் அந்த 5 மாடிக் கட்டடம் பிளாட்டினம் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

நாட்டின் மின்னிலக்கக் கட்டமைப்பு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் நீடித்த நிலைத்தன்மையைக் கொண்டிருப்பதை உறுதிசெய்வது மிகவும் முக்கியம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்