Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மின்னிலக்க வங்கிச் சேவையில் ஏற்பட்ட தடங்கலுக்கு இணையத் தாக்குதல் காரணமல்ல: DBS

DBS, POSB மின்னிலக்க வங்கிச்சேவை அமைப்புகள் பாதுகாப்பாக இருக்கின்றன என்றும் இணையத் தாக்குதலுக்கு இலக்காகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மின்னிலக்க வங்கிச் சேவையில் ஏற்பட்ட தடங்கலுக்கு இணையத் தாக்குதல் காரணமல்ல: DBS

(படம்: TODAY)

DBS, POSB மின்னிலக்க வங்கிச்சேவை அமைப்புகள் பாதுகாப்பாக இருக்கின்றன என்றும் இணையத் தாக்குதலுக்கு இலக்காகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னிலக்க வங்கிச் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியிருந்தாலும், 2 நாள் இடையூறு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என DBS வங்கி தனது Facebook பக்கத்தில் கூறியது.

அது மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அது சொன்னது.

ஏற்பட்ட தடங்கலுக்கு அது மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

கட்டுப்பாட்டு அம்சங்களில் ஏற்பட்ட கோளாற்றால் சேவைத்தடை ஏற்பட்டதாக வங்கி குறிப்பிட்டது.

வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதாக அது உறுதியளித்தது.

இதற்கிடையில், சேவைத் தடங்கல் தொடர்பாகப் பொருத்தமான மேற்பார்வை நடவடிக்கை எடுப்பது பற்றிப் பரிசீலிக்கவிருப்பதாகச் சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்தது.

-CNA/ad

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்