Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

DBS, POSB மின்னிலக்க வங்கிச் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளன

DBS, POSB மின்னிலக்க வங்கிச் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

DBS, POSB மின்னிலக்க வங்கிச் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவை இடையூறுகள் சரிசெய்யப்பட்டிருப்பதாக DBS வங்கி அதன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறது.

கடந்த 2 நாளாக DBS, POSB மின்னிலக்க வங்கிச் சேவைகள் தடைப்பட்டன.

இன்று காலை 9.40 மணிவாக்கில் சேவைத் தடங்கல் குறித்து 60க்கும் மேற்பட்ட அறிக்கைகள் பெறப்பட்டதாக Downdetector இணையத்தளம் குறிப்பிட்டது.

இந்நிலையில் சேவைத் தடங்கல் தொடர்பாகப் பொருத்தமான மேற்பார்வை நடவடிக்கை எடுப்பது பற்றிப் பரிசீலிக்கவிருப்பதாக சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்தது.

சேவைத் தடங்கலைக் கடுமையாய்க் கருதுவதாகச் சொன்ன வாரியம், DBS விரிவான புலனாய்வு மேற்கொள்ள வலியுறுத்தியது.

தடங்கலுக்கான மூலக் காரணங்களைக் கண்டறிந்து தேவையான சீரமைப்பை DBS மேற்கொள்ள வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்