Images
  • DBS bank
    கோப்புப் படம்: REUTERS/Edgar Su

DBS வங்கி அறிவிப்புத் தட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பில் பிழைகள் - அறிவிப்பு திருத்தப்பட்டது

தோ பாயோவில் DBS வங்கிக் கிளை ஒன்றில் அறிவிப்புத் தட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பில் பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து DBS நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

வங்கியின் கிளைகளில் நோய்ப்பரவலைத் தவிர்ப்பதற்காக எடுக்கப்படும் பாதுகாப்பு நடைமுறைகளை விளக்கும் தட்டியில் அந்தப் பிழைகள் காணப்பட்டன. நான்கு மொழிகளிலும் இடம்பெற்ற அறிவிப்பில் எழுத்துருக் கோளாற்றினால், தமிழ் எழுத்துகள் மாறியிருந்தன.

அறிவிப்புத் தட்டி மாற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

'செய்தி' எழுத்துப் பிழையைப் பற்றி தெரிவித்த பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், சரியாக அச்சிடப்பட்ட அறிவிப்புத் தட்டி வங்கிக் கிளைக்குச் சென்று சேரவில்லை என்று தெரியவந்ததாக DBS நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

மற்ற கிளைகளில் பிழைகளைக் கொண்ட தட்டிகள் இல்லை என்பதை நிறுவனம் உறுதிசெய்தது.  

Top