Images
  • DBS 1
    கோப்புப்படம்:  DBS

மூன்றாவது நாளாக DBS வங்கி மின்னிலக்கச் சேவையில் தடங்கல்

DBS வங்கி மின்னிலக்கச் சேவையில் தொடர்ந்து மூன்றாவது நாளாகத் தடங்கல் நீடிப்பதாக வாடிக்கையாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.

சேவை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக நேற்றிரவு பத்தரை மணிக்கு DBS வங்கி Facebook இல் குறிப்பிட்டிருந்தது.

நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாய்க் கண்காணித்து வருவதாகச் சொன்ன வங்கி, வாடிக்கையாளர்களின் பொறுமைக்கு நன்றி கூறியது.

ஆனால், இன்று காலையிலும் மின்னிலக்க வங்கிக் கணக்கின் மூலம் பரிவர்த்தனை செய்ய முடியவில்லை என்று வாடிக்கையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொருமுறை சொடுக்கும்போதும், உரிய பக்கத்துக்குப் பதிலாக முகப்புப் பக்கமே தெரிவதாகப் பயனீட்டாளர்கள் சிலர் Facebook இல் தெரிவித்துள்ளனர்.

சேவைத் தடங்கல் தொடர்பாகப் பொருத்தமான மேற்பார்வை நடவடிக்கை எடுப்பது பற்றிப் பரிசீலிக்கவிருப்பதாக சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்தது.

சேவைத் தடங்கலைக் கடுமையாய்க் கருதுவதாகச் சொன்ன வாரியம், DBS விரிவான புலனாய்வு மேற்கொள்ள வலியுறுத்தியது.

தடங்கலுக்கான மூலக் காரணங்களைக் கண்டறிந்து தேவையான சீரமைப்பை DBS மேற்கொள்ளவேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.  

Top