Images
  • dbs
    படம்: AFP

DBS மின்னிலக்க வங்கிச் சேவையில் மீண்டும் கோளாறு

DBS மின்னிலக்க வங்கிச் சேவையில் மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (நவம்பர் 23) காலையில் DBS, POSB வங்கிகளின் மின்னிலக்கச் சேவைகளில் இடையூறு ஏற்பட்டது.

இன்று காலை சேவைகள் செயல்படத் தொடங்கியதாகச் சொன்ன வங்கி, தற்போது மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தனது Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நிலைமையைச் சீர்செய்ய முயல்வதாக வங்கி சொன்னது.

சிரமத்தை எதிர்நோக்கும் வாடிக்கையாளர்களிடம் அது மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

எதனால் சேவைத்தடை ஏற்பட்டது என்ற விவரங்களை வங்கி தெரிவிக்கவில்லை.

முன்னதாக இன்று காலை 2 மணியளவில் மீண்டும் சேவைகள் செயல்படத் தொடங்கிவிட்டதாக வங்கி கூறியிருந்தது.

ஆனால் இன்னமும் சிரமங்களை எதிர்நோக்குவதாக வாடிக்கையாளர்கள் பலர் கூறினர்.

பின்னிரவு 2 மணிக்குச் சீராக்கப்பட்ட சேவையில் இன்று காலை 6 மணியிலிருந்து மீண்டும் சிரமத்தை எதிர்நோக்குவதாக Downdetector இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

-CNA/dv(ac)

Top