Images
  • Court

செந்தோசா ஹோட்டலின் நீச்சல் குளத்தில் சிறுமி தனியாக விடப்பட்டதால்தான் மாண்டார் : மரண விசாரணை அதிகாரி

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

செந்தோசா ஹோட்டலின் நீச்சல் குளத்தில் 6 வயதுச் சிறுமி, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் மூழ்கிப் பின்னர் மாண்டார்.

அது தொடர்பாக மரண விசாரணை அதிகாரி நடத்திய விசாரணையில் நீச்சல் குளத்தில் சிறுமி தனியாக விடப்பட்டதால்தான் மாண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் செந்தோசாவில் உள்ள Festive ஹோட்டலில் நடந்தது.

பேச்சு மூச்சின்றிக் குளத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுமி, 10 நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையில் மாண்டார்.

விசாரணையில் சிறுமிக்கு நீச்சல் தெரியாது என்றும், நீச்சல் குளத்தில் சிறுமி நீச்சல் மிதவையுடன் தனியாக விடப்பட்டதும் தெரியவந்தது.

குழந்தைகளுக்கு நீச்சல் தெரிந்திருத்தாலும் அவர்கள் நீச்சல் குளத்தில் இருக்கும்போது பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்று அதிகாரி வலியுறுத்தினார்.

குறிப்பிட்ட அந்த நீச்சல் குளத்தில், உயிர்க் காப்பாளர் யாரும் பணியில் இல்லை என்பது பல இடங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை அதிகாரி சுட்டினார்.

முன்னதாக, ஹோட்டல் குளத்தின் பாதுகாப்புக் குறைபாடே சிறுமியின் மரணத்திற்குக் காரணம் என்று சிறுமியின் தந்தை குறைகூறினார்.
 

Top