Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மலேசியர் தங்கிய ஹோட்டலில் முழுமையான துப்புரவுப் பணிகள்

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மலேசியர் தங்கிய Grand Hyatt ஹோட்டலில் முழுமையான துப்புரவுப் பணிகள் நடந்து வருவதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மலேசியர் தங்கிய ஹோட்டலில் முழுமையான துப்புரவுப் பணிகள்

(படம்: Facebook/Grand Hyatt Singapore)

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மலேசியர் தங்கிய Grand Hyatt ஹோட்டலில் முழுமையான துப்புரவுப் பணிகள் நடந்து வருவதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் நடந்த வர்த்தகச் சந்திப்பில், பாதிக்கப்பட்ட 42 வயது மலேசிய ஆடவர், சீனக் குடிமக்களுடன் கலந்துகொண்டதாக சுகாதார அமைச்சு நேற்று (பிப்ரவரி 4 ) தெரிவித்தது.

ஹோட்டலின் பொது இடங்கள், உணவகங்கள், சந்திப்பு இடங்கள், அறைகள் போன்றவற்றை சுகாதார அமைச்சின் வழிமுறைகளுக்கு ஏற்ப சுத்தம் செய்து வருவதாக ஹோட்டல் தெரிவித்தது.

ஸ்காட்ஸ் ரோட்டில் அமைந்துள்ள ஹோட்டலில் ஆடவர் ஜனவரி 16 முதல் ஜனவரி 23 வரை தங்கியிருந்தார்.

ஹோட்டலில் தங்கிய மற்றவர்களிடமோ, ஊழியர்களிடமோ கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை.

மலேசிய ஆடவருடன் சந்திப்பில் கலந்துகொண்ட தென்கொரியருக்கும் கிருமித்தொற்று பரவியது.

மலேசிய ஆடவருடன் தொடர்பில் இருந்த நபர்களை அடையாளம் காண மலேசியாவுடன் ஒத்துழைத்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்