Images
  • elephant-1

தீபாவளிக்குத் தயாராகும் சாங்கி விமான நிலையம் (படங்கள்)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் தீபாவளியை வரவேற்க யானை அலங்காரங்கள் தயாராகி வருகின்றன.


கழுத்தில் பூமாலை போட்டுக்கொண்டு, தாமரை மேல் குட்டி யானையும், பெரிய யானையும் உட்கார்ந்துக் கொண்டு சிரிப்பது கொள்ளை அழகாகக் காட்சியளிக்கிறது.


யானையின் தும்பிக்கையிலிருந்து நீரூற்று போல் தண்ணீர் வெளியாகும் என்று அதை நிறுவிக்கொண்டிருந்த தோட்டக்கலை நிறுவனம் சொன்னது.


இந்தியப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வண்ணம் வாழைக்கன்றுகள் அலங்காரத்திற்கு எழில் கூட்டுகின்றன.  

முழு அலங்காரமும் இன்று இரவு தயாராகிவிடும் என்றும் அது தெரிவித்தது.


Top