Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'கொண்டாட்டத்துடன் கற்றல்'- தீபாவளிக் காணொளிக்குப் பிரதமர் லீயின் பாராட்டு

தீபாவளி நெருங்கும் வேளையில் கொண்டாட்ட உணர்வை மட்டுமல்லாமல் கற்றல் உணர்வையும் தூண்டவேண்டும் என்பதை வலியுறுத்தும் காணொளியைப் பாராட்டியுள்ளார் பிரதமர் லீ சியென் லூங்.

வாசிப்புநேரம் -
'கொண்டாட்டத்துடன் கற்றல்'- தீபாவளிக் காணொளிக்குப் பிரதமர் லீயின் பாராட்டு

(படம்: leehsienloong/ Instagram)


தீபாவளி நெருங்கும் வேளையில் கொண்டாட்ட உணர்வை மட்டுமல்லாமல் கற்றல் உணர்வையும் தூண்டவேண்டும் என்பதை வலியுறுத்தும் காணொளியைப் பாராட்டியுள்ளார் பிரதமர் லீ சியென் லூங்.

gov.sg தயாரித்துள்ள அந்தக் காணொளியில் இடம்பெறும் பாட்டி 'Adapt and Grow' திட்டம் வழி தம்முடைய உணவுத் தயாரிப்பு முறையை மேம்படுத்திக்கொண்டு பலதரப்பட்ட பதார்த்தங்களைச் சமைக்கிறார்.

பாட்டி என்றால் வடை சுட மட்டும்தான் தெரியும் என்பதல்ல...இணையம்வழி உணவுகளை விற்கும் நிலையைக்கூட எட்டலாம் என்பதைக் காணொளி அழகாக எடுத்துக்காட்டுவதாகப் பிரதமர் லீ புகழ்ந்தார்.

வாழ்நாள் கற்றலுக்கு உதாரணமாக விளங்கும் சிறந்த காணொளியாக அதனைத் தம்முடைய Instagram பதிவில் பாராட்டியுள்ளார் பிரதமர் லீ.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்