Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தீபாவளியை முன்னிட்டுக் கூட்டாக விளம்பரத் திட்டங்களை அறிமுகம் செய்யும் Mediacorp & Singapore Press Holdings

தீபாவளியை முன்னிட்டு விளம்பரங்களைச் செய்யும் நிறுவனங்கள் மேலும் அதிகமானோரைச் சென்றடைய, Mediacorp-உம், Singapore Press Holdings நிறுவனமும் இணைந்து விளம்பரத் திட்டங்களை வழங்கவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -

தீபாவளியை முன்னிட்டு விளம்பரங்களைச் செய்யும் நிறுவனங்கள் மேலும் அதிகமானோரைச் சென்றடைய, Mediacorp-உம், Singapore Press Holdings நிறுவனமும் இணைந்து விளம்பரத் திட்டங்களை வழங்கவிருக்கின்றன.

அதன் மூலம், நிறுவனங்கள் விளம்பரச் செலவில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமாகச் சேமிக்கலாம்.

இன்றுமுதல் வரும் நவம்பர் மாத இறுதி வரை, தீபாவளிக்கான விளம்பர விற்பனைத் திட்டத்தில் உள்ள மூன்று தெரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

அச்சு, மின்னியல், வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்கள் அவற்றில் அடங்கும்.

அதன் மூலம், வாரந்தோறும் 290,000 அதிகமான இந்தியர்களைச் சென்றடைய முடியும் என்பது எதிர்பார்ப்பு.

வசந்தம் ஒளிவழி, ஒலி 96.8 வானொலி நிலையம், தமிழ் முரசு நாளிதழ், அதன் இணையத்தளம், tabla வார இதழ் போன்றவற்றில் விளம்பரங்கள் இடம்பெறும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்