Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விபத்தில் சிக்கிய மான் கருணைக் கொலை செய்யப்பட்டது

புக்கிட் தீமா விரைவுச்சாலையில், இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்துத்துடன் தொடர்புடைய அரிய வகைக் காட்டு மான் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
விபத்தில் சிக்கிய மான் கருணைக் கொலை செய்யப்பட்டது

(படம்: ACRES)

புக்கிட் தீமா விரைவுச்சாலையில், இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்துத்துடன் தொடர்புடைய அரிய வகைக் காட்டு மான் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது.

விபத்து நேர்ந்ததில் படுகாயம் அடைந்த மான் உயிர்பிழைப்பது கடினம் என்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

விரைவுச்சாலையின் குறுக்கே விரைந்து சென்றபோது 120 கிலோகிராம் எடையுடைய அந்த மான், மூன்று வாகனங்களை விபத்தில் சிக்க வைத்தது.

திடீரெனச் சாலையைக் கடக்க முயன்ற காட்டு மானை மோதாமல் தவிர்க்க வாகன ஓட்டுநர்கள் முயன்றபோது வாகனங்கள் மோதிக்கொண்டன.

அவசர சிகிச்சை பெற மான் சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அங்கே, சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்தைச் சேர்ந்த விலங்கு மருத்துவரும் ஐந்து விலங்குக் காப்பாளர்களும் மானைக் காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனால், படு காயங்கள் ஏற்பட்டு எலும்பு முறிவால் அவதியுற்ற மானைக் காப்பாற்ற இயலாமல் காலை 8 மணிக்கு அது கருணைக் கொலை செய்யப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்