Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கணக்கியல் விவரங்களை உடனுக்குடன் வழங்க உருவாக்கப்பட்ட செயலி

வேகமாக வளர்ச்சி கண்டுவரும் சிங்கப்பூரின் வர்த்தகச் சூழலில், நிறுவனங்களும் வர்த்தகர்களும் தகவல்களை உடனுக்குடன் பெறுவதும் வழங்குவதும் அவசியம்.

வாசிப்புநேரம் -

வேகமாக வளர்ச்சி கண்டுவரும் சிங்கப்பூரின் வர்த்தகச் சூழலில், நிறுவனங்களும் வர்த்தகர்களும் தகவல்களை உடனுக்குடன் பெறுவதும் வழங்குவதும் அவசியம்.

தொழில்நுட்ப யுகத்தில் தகவல்கள் விரல்நுனிக்கு வருவதையே அனைவரும் விரும்புகின்றனர்.

வர்த்தகச் சமூகத்தைச் சேர்ந்தோர் விரைவில் முடிவெடுப்பதற்கும், திட்டமிடவும் ஏதுவாக, 2011ஆம் ஆண்டு இன்றைய தினம் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய முடிவெடுத்தது, ACRA எனும் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம்.

“ACRA On The Go” என்று செயலி பெயரிடப்பட்டது.

தேவைப்படும் நேரத்தில், கணக்கியல் சார்ந்த தகவல்களைப் பெறத் திறன்பேசிச் செயலி வழி செய்யும் என்றது ACRA.

ACRA இணையப்பக்கத்தின் நீட்டிக்கப்பட்ட சேவையாக, செயலியின் முதல் பதிப்பு விளங்கியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்