Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புலியோடு நெருங்கிய நட்புக் கொண்டிருந்த ஆடு மரணம்

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் புலியோடு நெருங்கிய நட்புக் கொண்டிருந்த ஆடு மாண்டதாக கூறப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
புலியோடு நெருங்கிய நட்புக் கொண்டிருந்த ஆடு மரணம்

(படம்: AFP/Primorye Safari Park/Dmitry Mezentsev)

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் புலியோடு நெருங்கிய நட்புக் கொண்டிருந்த ஆடு மாண்டதாக கூறப்பட்டுள்ளது.

டிமுர் (Timur) என்ற ஆடு, 2015-ஆம் ஆண்டில் வுலாடிவொஸ்டொக் பகுதியின் வனப்பூங்காவில் வாழும் புலிக்கு இரையாக அனுப்பப்பட்டது.

டிமுரைப் புலியின் இருப்பிடத்திற்குள் விட்டபோது, புலி அதைத் தாக்கவில்லை.

மரணத்தை நெருங்கியபோதும் ஆடு துணிச்சலாக இருந்தது காரணமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

டிமுரும் புலியும் இணை பிரியாத நண்பர்களாக மாறினர்.

விலங்குகள் இரண்டும் ஒரே இடத்தில் உலவித் திரிந்தன. தூங்குவது, சாப்பிடுவது, விளையாடுவது என ஒன்றாகக் கூடிக் களித்தன.

ஆட்டின் செயல்கள் ரஷ்ய மக்களின் மனத்தைக் கவர்ந்தது.

இருப்பினும், டிமுர் எப்போதுவேண்டுமானாலும் புலிக்கு இரையாகலாம் என்பதை மறந்துவிட்டது.

2016-இல், டிமுர் புலி மீது அதிகாரம் காட்டியபோது, புலி அதனைத் தாக்கியது.

அப்போது ஏற்பட்ட காயங்களிலிருந்து ஆடு முழுமையாக குணமடையவில்லை.

டிமுரின் கல்லறையில் அதன் நினைவுச் சிலை நிறுவப்படவுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்