Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மாணவர்கள் சிங்கப்பூரில் உள்ள அரும்பொருளகங்களைக் கண்டுகளிக்க ஏற்பாடு

தேசிய மரபுடைமைக் கழகம், பள்ளி விடுமுறையின்போது மாணவர்கள் நேரடியாகவும் இணையம் வழியாகவும் நாட்டில் உள்ள பல அரும்பொருளகங்களைக் கண்டுகளிக்க ஏற்பாடு செய்துள்ளது.

வாசிப்புநேரம் -

தேசிய மரபுடைமைக் கழகம், பள்ளி விடுமுறையின்போது மாணவர்கள் நேரடியாகவும் இணையம் வழியாகவும் நாட்டில் உள்ள பல அரும்பொருளகங்களைக் கண்டுகளிக்க ஏற்பாடு செய்துள்ளது.

Children’s Season என்றழைக்கப்படும் அந்த நிகழ்ச்சியின்வழி, இளம் வயதினர் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மரபுடைமை பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

22 அரும்பொருளகங்கள் 70க்கு மேற்பட்ட கண்காட்சிகளையும் திட்டங்களையும் வழங்குகின்றன.

ஆண்டுதோறும் நடைபெறும் Children’s Season நிகழ்ச்சியில் இந்த ஆண்டு, 'Ai' எனும் 6 வயதுச் சிறுவனின் கதாபாத்திரம் இடம்பெறுகிறது.

மறைக்கப்பட்ட அந்தச் சிறுவனின் படங்களை மாணவர்கள் நேரடியாக அரும்பொருளகங்களில் மட்டுமின்றி இணையம் வழியாகவும் கண்டுபிடிக்கலாம்.

இணைய விளையாட்டு, இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கும்.

அதன் தொடர்பில் இந்திய மரபுடைமை நிலையமும் சில ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்