Images

காற்றுத்தூய்மைக்கேட்டால் புதுடில்லி செல்வதைத் தவிர்க்கும் சிங்கப்பூர்வாசிகள்

காற்றுத்தூய்மைக்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ள புதுடில்லிக்கு சிங்கப்பூரிலிருந்து செல்வோரின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது.

உலகச் சுகாதார அமைப்பு வரையறுத்துள்ள காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டின் அளவு 50.

ஆனால், புதுடில்லியில் அது 10 மடங்கு அதிகரித்து, கடந்த வாரம் 500ஆகப் பதிவானது.

காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதால் சிங்கப்பூரில் உள்ளோர் அங்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

Top