Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 66 மில்லியன் வெள்ளி முதலீட்டில் Dell நிறுவனத்தின் ஆய்வு-வளர்ச்சி நிலையம்

சிங்கப்பூரில் 66 மில்லியன் வெள்ளி முதலீட்டில் Dell நிறுவனத்தின் ஆய்வு-வளர்ச்சி நிலையம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் 66 மில்லியன் வெள்ளி முதலீட்டில் Dell நிறுவனத்தின் ஆய்வு-வளர்ச்சி நிலையம்

படம்: REUTERS

அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான Dell, சுமார் 66 மில்லியன் வெள்ளி முதலீட்டில் தனது புதிய ஆய்வு-வளர்ச்சி நிலையத்தைச் சிங்கப்பூரில் நிறுவவுள்ளது.

அதன் மூலம், 160க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

கிருமித்தொற்றுச் சூழலில் சிங்கப்பூரில் தொடர்ந்து முதலீடு செய்துவரும் உலகளாவிய நிறுவனங்களில் Dell-லும் ஒன்று.

உலகளாவிய தொழில்நுட்ப, புத்தாக்க மையமாகச் சிங்கப்பூர் திகழ உதவும் அதேவேளையில், கிருமித்தொற்றிலிருந்து வலிமையாக மீண்டுவரவும் அத்தகைய முதலீடுகள் உதவுகின்றன.

நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங், Dell-இன் முதலீடு சரியான நேரத்தில் வந்துள்ளதாகக் கூறினார்.

இத்தகைய திறன்களை மேம்படுத்த, அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளித்து முதலீடு செய்யும் என்றார் அவர்.

டெல் நிறுவனம் தனது ஆய்வு-வளர்ச்சி நிலையத்தை நிறுவ சிங்கப்பூரைத் தெரிவு செய்தது சிங்கப்பூரின் வலிமையை எடுத்துக் காட்டுவதாகவும் திரு. சான் குறிப்பிட்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்