Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 5,000க்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்களுக்கு மேகக்கணிமை, தரவுப் பகுப்பாய்வில் பயிற்சி

சிங்கப்பூரில் 5,000க்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்கள், மேகக்கணிமை, தரவுப் பகுப்பாய்வு ஆகிய அம்சங்களில் பயிற்சி பெறவிருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் 5,000க்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்கள், மேகக்கணிமை, தரவுப் பகுப்பாய்வு ஆகிய அம்சங்களில் பயிற்சி பெறவிருக்கின்றனர்.

Dell Technologies நிறுவனமும், 4 உயர்கல்வி நிலையங்களும் அதன் தொடர்பில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், Ngee Ann பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவை அந்தக் கல்வி நிலையங்களில் அடங்கும்.

அந்தப் பங்காளித்துவத்தை இன்னும் கூடுதலான உயர்கல்வி நிலையங்களுடன் இணைக்கத் திட்டங்கள் உள்ளதாக Dell Technologies நிறுவனம் தெரிவித்தது.

நிறுவனத்தின் மின்னிலக்கக் கற்றல் தளங்களிலும் இணையப் பயிலரங்குகளிலும் கலந்துகொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.

ஆய்வகப் பயிற்சிகளின் மூலம் மாணவர்கள் செயல்முறை நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

Dell நிறுவனத்தைச் சேர்ந்த வழிகாட்டிகள் இறுதியாண்டு திட்டங்கள், வேலை அனுபவப் பாடக்கலைத் திட்டங்கள் ஆகியவற்றில் மாணவர்களுக்கு உதவ முன்வந்திருக்கின்றனர்.

மின்னிலக்கப் பொருளியலுக்கான திறமைமிக்க மனிதவளம் தயாராக இருப்பதை உறுதிசெய்யத் திட்டம் உதவும் என்று தொடர்பு, தகவல் துணையமைச்சர் டான் கியெட் ஹாவ் (Tan Kiat How) கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்