Images
  • dempsey
    (படம்: CNA)

டெம்ப்சி ஹில் பகுதியின் கடைகள் மேலும் ஈராண்டுக்குச் செயல்படலாம்

டெம்ப்சி ஹில் (Dempsey Hill)பகுதியில் இயங்கிவரும் பெரும்பாலான கடைகளின் வாடகைதாரர்கள், மேலும் ஈராண்டுக்கு அங்கே வர்த்தகத்தைத் தொடரமுடியும்.

Country City Investments என்ற நிறுவனம் டெம்ப்சி ஹில் பகுதியின் குத்தகைதாரர்.

அது, சிங்கப்பூர் நில ஆணையத்துடன் இணைந்து குத்தகைக் காலத்தை நிர்ணயிக்கிறது.

இருப்பினும் அந்தப் பகுதியில் உள்ள 17 கட்டடங்களில், 3 கட்டடங்களில் செயல்படும் கடைக்காரர்கள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக CNA அறிகிறது.

புதிய கடைக்காரர்களுக்கு அவை வாடகைக்கு விடப்படவுள்ளன.

வெளியேறவிருக்கும் கடைக்காரர்களில் சில உணவகங்களும் அடங்கும்.

வரும் மார்ச் மாதம் குத்தகைக்காலம் முடியும்போது, அவர்கள் கடையைக் காலி செய்யவேண்டும். 

Top