Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

டெங்கிச் சம்பவங்கள் கடந்தாண்டை விட அதிகம்

இவ்வாண்டில் இதுவரை பதிவான டெங்கிச் சம்பவங்கள் கடந்தாண்டு பதிவான மொத்த டெங்கிச் சம்பவங்களை விட அதிகம் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
டெங்கிச் சம்பவங்கள் கடந்தாண்டை விட அதிகம்

(படம்: AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இவ்வாண்டில் இதுவரை பதிவான டெங்கிச் சம்பவங்கள் கடந்தாண்டு பதிவான மொத்த டெங்கிச் சம்பவங்களை விட அதிகம் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

நேற்று (மே 16) பிற்பகல் 3 மணி நிலவரப்படி இவ்வாண்டு சுமார் 3,500 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகின. கடந்தண்டில் மொத்தமாகப் பதிவான டெங்கிச் சம்பவங்கள் சுமார் 3,300.

இவ்வாண்டு மூவர் டெங்கிக் காய்ச்சலால் மாண்டனர்.

கடந்த வாரம் மட்டும் சுமார் 290 சம்பவங்கள் பதிவாகின. ஏழு வாரங்களாக டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.

உட்லண்ட்ஸ், சாய் சீ, கேலாங், செம்பாவாங் பகுதிகளில் சுமார் 44 இடங்கள் டெங்கி பரவும் இடங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளன.

எதிர்வரும் வெப்பமான மாதங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்