Images
டெங்கிப் பரவலை குறைக்க உதவும் வொல்பாக்கியா கொசுக்களுக்கான புதிய நிலையம்
டெங்கிப் பரவலுக்குக் காரணமான ஏடிஸ் கொசுக்களைக் குறைக்க உதவும் வொல்பாக்கியா கொசுக்களுக்கான புதிய நிலையம் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டுடன் ஒப்புநோக்க இந்த ஆண்டு சிங்கப்பூரில் டெங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் 5 மடங்கு அதிகரித்துள்ளன.
சென்ற மாதம் 23ஆம் தேதி நிலவரப்படி சுமார் 14,660 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
புதிய நிலையம் தானியக்க முறையில் பெண் கொசுக்களைப் பிரிக்க உதவும்.
ஒரு வாரத்தில் 5 மில்லியன் ஆண் வொல்பாக்கியா கொசுக்களைப் பெருக்க அது வகைசெய்யும்.
அத்தகைய கொசுக்களுடன் இணையும் பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் பொரியமாட்டா.
அதன் மூலம் டெங்கிக் கிருமியைப் பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைப்பது திட்டம்.
புதிய நிலையம் அங் மோ கியோவில் அமைந்துள்ளது.
Project வொல்பாக்கியா திட்டம் அதன் நான்காவது கட்டத்தில் உள்ளது.