Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

டெங்கித் தொற்று - ஆடவர் மரணம்

டெங்கித் தொற்று காரணமாக 74 வயது ஆடவர் மாண்டதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
டெங்கித் தொற்று - ஆடவர் மரணம்

(படம்: AFP)

டெங்கித் தொற்று காரணமாக 74 வயது ஆடவர் மாண்டதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு டெங்கித் தொற்று பற்றி தெரிய வந்தபிறகு ஏற்படுட்டுள்ள முதல் மரணம் அது.

மாண்டவர் பிடோக் ரெசர்வாயர் ரோட்டில் வசித்தார்.

அந்த வட்டாரம், நாட்டில் ஆக அதிகமான டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ள இடத்தில் அமைந்துள்ளது.

அங்கு இதுவரை 164 டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

டெங்கித் தொற்றுக்கு ஆளான பெரும்பாலோர் தற்போது அதிலிருந்து மீண்டு வருவதாக சுகாதார அமைச்சு கூறியது.

என்றாலும், கிருமித் தொற்று காரணமாக ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் சிலருக்கு மரணத்தை விளைவிக்கலாம்.

குறிப்பாக, மூத்த நோயாளிகளுக்கும், வேறு சுகாதாரப் பிரச்சினைகள் உள்ளோருக்கும் அது பொருந்தும்.

டெங்கித் தொற்று அறிகுறி உடையோர் முன்கூட்டியே அதைக் கண்டறிந்து மருத்துவரை நாடுமாறு அமைச்சு வலியுறுத்தியது.

இரண்டு நாள் முதல் ஒரு வாரம் வரை நீடிக்கும் திடீர் காய்ச்சல், கண்களுக்குப் பின்னே வலியுடன் கூடிய கடும் தலைவலி ஆகியவை டெங்கி அறிகுறிகளாகச் சொல்லப்படுகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்