Images
  • Mosquito
    (கோப்புப் படம்: Pixabay)

கொசுப்பரவல் - 21 கட்டுமானத் தளங்களில் வேலையை நிறுத்த தேசியச் சுற்றுப்புற அமைப்பு உத்தரவு

சிங்கப்பூரில் உள்ள 21 கட்டுமானத் தளங்களில், கொசுப்பரவல் கண்டறியப்பட்டதால், அங்கு வேலையை நிறுத்துமாறு தேசியச் சுற்றுப்புற அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

குத்தகையாளர்கள் 10 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

ஜூலையுடன் ஒப்புநோக்க, சென்ற மாதம் கட்டுமானத் தளங்களில் கொசுப் பெருக்கம் 55 விழுக்காடு குறைந்ததாக ஆணையம் தெரிவித்தது. இருப்பினும் சில தளங்கள் விதிகளைப் பின்பற்றவில்லை. 

அருணசலம் செட்டி சாலை, கிம் யாம் சாலை, சிராங்கூன் நார்த் அவென்யூ ஆகிய இடங்களில் உள்ள கட்டுமானத் தளங்களில் கொசுப் பெருக்கம் கண்டறியப்பட்டது. 

ஜூலையிலும், இந்த மாதமும் முறையே இரண்டு தடவை வேலை நிறுத்த உத்தரவிடப்பட்டது.

அந்தக் கட்டுமானத் தளங்களில் மீண்டும் கொசுப் பெருக்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகே, இம்மாதம் விதிக்கப்பட்ட வேலை நிறுத்த உத்தரவு மீட்டுக்கொள்ளப்படும் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

கட்டுமானத் தளங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி, டெங்கிப் பரவல் கட்டுப்படுத்தப்படும் என்று அது குறிப்பிட்டது.

கட்டுமானத் துறை, கொசு பெருக்கம் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமைப்பு அறிவுறுத்தியது.

Top