Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இவ்வாரம் பதிவுசெய்யப்பட்ட டெங்கித் தொற்றுச் சம்பவங்கள் 'வரலாறு காணாத' எண்ணிக்கையை எட்டின

சிங்கப்பூரில் இவ்வாரம் பதிவுசெய்யப்பட்ட டெங்கித் தொற்றுச் சம்பவங்கள் 2014 பதிவு செய்யப்பட்ட ஆக அதிக எண்ணிக்கையைக் கடந்துள்ளது. ஐந்தரை நாளில் 895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் இவ்வாரம் பதிவுசெய்யப்பட்ட டெங்கித் தொற்றுச் சம்பவங்கள் 'வரலாறு காணாத' எண்ணிக்கையை எட்டின

(படம்: AFP)

சிங்கப்பூரில் இவ்வாரம் பதிவுசெய்யப்பட்ட டெங்கித் தொற்றுச் சம்பவங்கள் 2014 பதிவு செய்யப்பட்ட ஆக அதிக எண்ணிக்கையைக் கடந்துள்ளது. ஐந்தரை நாளில் 895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் 10,700க்கும் மேற்பட்ட டெங்கிச் சம்பவங்கள் பதிவானதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

ஞாயிறு (ஜூன் 8) முதல் நேற்று (ஜூன் 12) பிற்பகல் 3 மணிவரை மட்டுமே பதிவான சம்பவங்கள் கணக்கிடப்பட்டதால் இவ்வாரத்துக்கான சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

56-வயதுக்கும் 80-வயதுக்கும் இடைப்பட்ட 12 பேர் டெங்கிக்கு இந்த ஆண்டு பலியாயினர்.

வழக்கம் போல ஜூன் முதல் அக்டோபர் வரை உச்சத்தை எட்டும் டெங்கிப்பரவலைக் கட்டுப்படுத்த இம்முறை சமூக அளவில் அவசர நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அமைப்பு கடந்த வாரம் எச்சரித்தது.

2013இல் ஆக அதிக அளவில் 22,000க்கும் அதிகமான டெங்கித் தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. இந்த ஆண்டு பதிவாகும் சம்பவங்கள், அந்த எண்ணிக்கையைக் கடக்கும் என்று முன்னுரைக்கப்படுகிறது.

முதல் நான்கு மாதங்களில் வாரத்துக்கு 300க்கும் 400க்கும் இடைப்பட்ட சம்பவங்கள் பதிவாயின. அந்த எண்ணிக்கை கடந்த மாதத்திலிருந்து வெகுவாக அதிகரித்துள்ளது.

தற்போது தீவெங்கும் சுமார் 210 டெங்கித் தொற்று இடங்கள் உள்ளன. அவற்றில் 66 அபாய நிலையில் இருப்பதாய்க் கூறப்படுகிறது.

உட்லீ குளோஸ், பொத்தோங் பாசிர் அவென்யு 1,2,3, தெம்பனீஸ் அவென்யு 7 போன்றவை அவற்றில் அடங்கும்.

பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கொசுத்தடுப்பு மருந்துகளைப் பூசிக்கொள்வதுடன், வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் தேங்கியுள்ள நீரை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்