Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் கடந்த வாரம் 565 பேருக்கு டெங்கிப் பாதிப்பு

சிங்கப்பூரில் கடந்த வாரம் 565 பேர் டெங்கிப் பாதிப்புக்கு ஆளானதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் கடந்த வாரம் 565 பேர் டெங்கிப் பாதிப்புக்கு ஆளானதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று வரை, சிங்கப்பூரில் டெங்கியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32,806.

தனியார் அடுக்கு வீடுகள், கழக வீடுகள் ஆகியவற்றைக் காட்டிலும், தனியார் தரை வீடுகளிலே கூடுதலானோர் பாதிக்கப்பட்டதாக அமைப்பு குறிப்பிட்டது.

நேற்று வரை, சிங்கப்பூரில் 162 டெங்கிப் பரவல் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வழக்கமாக மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை டெங்கிப் பாதிப்பு உச்சத்தை தொடும். அந்தப் போக்கு இம்முறை சற்று மாறுப்பட்டிருக்கிறது.

கடந்த 5 வாரங்களாக, வாரந்தோறும் 600 பேர் வரை டெங்கியால் பாதிக்கப்பட்டனர்.

Aedes கொசுக்களின் பெருக்கத்தால் வரும் வாரங்களில் டெங்கிப் பாதிப்பு அதிகரிக்கக்கூடுமென தேசியச் சுற்றுப்புற அமைப்பு எச்சரித்துள்ளது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்