Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செலவை மிச்சப்படுத்த, கடல் தாண்டி பல் சிகிச்சை பெறும் சிங்கப்பூரர்கள்

சிங்கப்பூரில், அதிகரித்துவரும் பல் மருத்துவப் பராமரிப்புச் செலவு குறித்து, பத்தில் 9 பேர் கவலை கொள்வதாகக் கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -
செலவை மிச்சப்படுத்த, கடல் தாண்டி பல் சிகிச்சை பெறும் சிங்கப்பூரர்கள்

(படம்: Reuters)

சிங்கப்பூரில், அதிகரித்துவரும் பல் மருத்துவப் பராமரிப்புச் செலவு குறித்து, பத்தில் 9 பேர் கவலை கொள்வதாகக் கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அவர்களில் சுமார் 30 விழுக்காட்டினர், சிங்கப்பூரின் பொது சுகாதார அமைப்புகளையோ, ஜொகூர் பாரு, பேங்காக் போன்ற இடங்களையோ சிகிச்சைக்கு நாடுகின்றனர்.

சிங்கப்பூரில் பொது சுகாதார அமைப்புகளில் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருப்பது குறித்தும் கருத்தாய்வில் பங்கேற்றவர்கள் அக்கறை தெரிவித்தனர்.

சிங்கப்பூர் பல் மருத்துவச் சங்கத்தின் ஆதரவில் செயல்படும் குழு, கருத்தாய்வை நடத்தியது.

25 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 1,400 பேரின் கருத்துகள் கடந்த மாதம் திரட்டப்பட்டன.

கருத்தாய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள்.

பாதுகாப்பு, செயல்திறன் தொடர்பில் பல் மருத்துவர்கள்மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மதிப்பிடும் நோக்கத்திலும் கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்