Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

டெப்போ ரோடு ஸ்ரீ ருத்ரகாளியம்மன் கோயில் அருகே வாகனத்தால் மோதப்பட்ட சிறுவன் (காணொளி)

டெப்போ ரோடு ஸ்ரீ ருத்ரகாளியம்மன் கோயிலுக்கு வெளியே சாலையைத் தாண்டிய ஒரு சிறுவன்மீது ஒரு கார் மோதியது.

வாசிப்புநேரம் -
டெப்போ ரோடு ஸ்ரீ ருத்ரகாளியம்மன் கோயில் அருகே வாகனத்தால் மோதப்பட்ட சிறுவன் (காணொளி)

(படம்: Facebook/District Singapore)

டெப்போ ரோடு ஸ்ரீ ருத்ரகாளியம்மன் கோயிலுக்கு வெளியே சாலையைத் தாண்டிய ஒரு சிறுவன்மீது ஒரு கார் மோதியது.

Roads.sg இணையப்பக்கத்தில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டது அந்தக் காணொளி. சம்பவம் சனிக்கிழமை ( அக்டோபர் 5) நடந்தது.

கோயிலின் வெளியே இருக்கும் இருவழிச் சாலையில் ஒருபுறம் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. கோயிலிருந்து தாயாருடன் வெளியில்வந்த சிறுவன் ஓடிச்சென்று சாலையைக் கடக்கிறான். அப்போது எதிர்ப்புறத்திலிருந்த ஒரு கார் சிறுவன்மீது மோதுகிறது.

வாகனத்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட சிறுவன் கார் நகர்ந்ததும் எழுந்துவிடுகிறான். பதறிப்போன சிறுவனின் தாயார் ஓடிவருகிறார். சிறுவனுக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது தெரியவில்லை

District Singapore பக்கத்தில் காணொளி சுமார் 42,000 முறை பார்வையிடப்பட்டுள்ளது.

கோயிலுக்கு முன்னால் கார்களை நிறுத்துவதற்குக் கோயில் நிர்வாகம் தடைவிதிக்க வேண்டும் என்று Facebookஇல் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்