Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சொத்துச் சந்தையில் சூட்டைத் தணிக்கும் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை: தேசிய வளர்ச்சி அமைச்சர்

சொத்துச் சந்தையில் சூட்டைத் தணிக்கும் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை: தேசிய வளர்ச்சி அமைச்சர் 

வாசிப்புநேரம் -
சொத்துச் சந்தையில் சூட்டைத் தணிக்கும் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை: தேசிய வளர்ச்சி அமைச்சர்

(படம்: TODAY)

சொத்துச் சந்தையில் சூட்டைத் தணிக்கும் நடவடிக்கைகளில் மாற்றம் செய்வதன் தொடர்பில் தற்போது எந்தத் திட்டமும் இல்லை என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.

மாற்றங்கள் தேவையா என்பதை நிர்ணயிக்க, அதிகாரிகள் நிலவரத்தை அணுக்கமாய்க் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

PropNex சொத்து முகவர் நிறுவனம் நடத்திய மாநாட்டில் அவர் பேசினார்.

சொத்துச் சந்தை நிலையாக இருப்பதை அரசாங்கத்தின் தற்போதைய மதிப்பீடு காட்டுவதாகத் திரு. லீ கூறினார்.

கடந்த மாதம் தனியார் வீட்டு விற்பனை, 11 மாதங்களில் காணாத அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து திரு. லீ அந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

சென்ற மாதம், 1,200க்கும் மேற்பட்ட வீடுகள் தனியார் சொத்து மேம்பாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்