குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவ வலுவான சமுதாயத் தொடர்புகள் முக்கியம் : டெஸ்மண்ட் லீ
COVID-19 நோய்ப்பரவல் சூழலில், எளிதாகப் பாதிக்கப்படக்கூடியோருக்கும், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் சிறப்பான ஆதரவு வழங்குவதற்கு வலுவான சமுதாயத் தொடர்புகள் முக்கியம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.

கிருமிப்பரவல் காரணமாக நேரடித் திட்டங்களை நிறுத்தவேண்டியதாயிற்று.
ஆனால், சமூகப் பங்காளிகள் உடனடியாகத் திட்டங்களை இணையம் வழி வழங்கத் தொடங்கினர் என்றார் திரு லீ.
வாடகை வீடுகளில் இருக்கும் குடும்பங்களுக்குத் தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் அவர்கள் உதவியதாகத் திரு. லீ சொன்னார்.
குடும்பங்கள் தங்கள் இலக்குகளை அடைவதற்கு அதுபோன்ற நடவடிக்கைகள் உதவுவதாக அவர் கூறினார்.