Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மூதாட்டியைத் தூக்கிக் கொண்டு சாலையைக் கடந்த ஆடவர் - இணையவாசிகள் பாராட்டு

சிங்கப்பூரில் சாலையைக் கடக்க மூதாட்டி ஒருவர் சிரமப்பட்டதைக் கண்ட ஆடவர், அவரைத் தம் முதுகில் தூக்கிக் கொண்டு சாலையைக் கடந்த சம்பவம் இணையவாசிகளின் பாராட்டைப் பெற்றுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சாலையைக் கடக்க மூதாட்டி ஒருவர் சிரமப்பட்டதைக் கண்ட ஆடவர், அவரைத் தம் முதுகில் தூக்கிக் கொண்டு சாலையைக் கடந்த சம்பவம் இணையவாசிகளின் பாராட்டைப் பெற்றுள்ளது.

சம்பவம் நேற்று காலை 10:45 மணியளவில் வாட்டர்லூ ஸ்டிரீட் , மிடில் ரோட் சந்திப்பில் உள்ள பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடத்தில் நடந்தது.

மூதாட்டி, பாதசாரிகளுக்கான போக்குவரத்து சமிக்ஞை பச்சையாக இருக்கும்போது நடக்கத் தொடங்கினார். ஆனால் அவர் மிகவும் சிரமப்பட்டார்.

அந்த நேரத்தில் விளக்கு சிவப்பாக மாற வாகனங்கள் சாலையைக் கடக்கத் தொடங்கிவிட்டன. அது மூதாட்டியைப் பதற்றமடையச் செய்தது.

அதைப் பார்த்த ஆடவர் ஒருவர், சற்றும் யோசிக்காமல், உடனடியாக விரைந்து, மூதாட்டியை தன் முதுகில் தூக்கிக் கொண்டு சாலையைக் கடக்கத் தொடங்கினார்.

ஆடவர் செய்த செயலின் காணொளி Roads.SG Facebook பக்கத்தில் வெளியானது.

கிட்டத்தட்ட 200,000 முறை பார்க்கப்பட்ட அந்தக் காணொளி, பல இணையவாசிகளின் பாராட்டைப் பெற்றது.







விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்