Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நீரிழிவு தொடர்பான தேசிய வழிகாட்டித் தொகுப்பு - இவ்வாண்டின் இறுதிக்குள் தமிழிலும்....

சிங்கப்பூரர்களில் மூவரில் ஒருவர் நீரிழிவால் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரர்களில் மூவரில் ஒருவர் நீரிழிவால் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளது. நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்படுவோரில் மூவரில் ஒருவருக்கு அந்நோயைக் கட்டுப்படுத்தும் திறன் குறைவாக உள்ளது. அதன் காரணமாக நீரிழிவு நோயாளிகள் கை, கால் துண்டிக்கப்படுதல், சிறுநீரகச் செயலிழப்பு, இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரிக்கிறது.

அனைத்துலக நீரிழிவு தினம் தொடர்பில் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்ட, சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த துணையமைச்சர் எட்வின் தோங் அந்ந விவரங்களைச் சுட்டினார்.

படங்கள்: நித்திஷ் செந்தூர் 

நீரிழிவு தொடர்பில் சுகாதார நிபுணர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் கூடுதல் பயற்சிகள் வழங்கப்படும். பராமரிப்பை மேம்படுத்த அதிக வளங்கள் ஒதுக்கப்படும்

என்றும் அவர் குறிப்பிட்டார்.

துடிப்பான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் அம்சத்திலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. National Steps Challenge இயக்கம் அதற்கு ஓர் உதாரணம். சிங்கப்பூரர்கள் அன்றாடம் அதிகம் நடக்கவும் ஓடவும் அது ஊக்குவிக்கிறது. இதுவரை 1.9 மில்லியன் பதிவுகளை அந்த இயக்கம் பெற்றுள்ளது

என்றார் திரு. எட்வின் தோங்.

இன்றைய நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இலவசச் சுகாதாரப் பரிசோதனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுகாதார உரைகளும் இன்றைய நிகழ்ச்சியை அலங்கரித்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்