Images
  • nets
    படம்: AFP

NETS மின்-கட்டண விளம்பரம் இணைய விதிகளை மீறவில்லை: தகவல்-தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

NETS மின்-கட்டணச் சேவையை விளம்பரப்படுத்த, உள்ளூர்த் தொலைக்காட்சி நட்சத்திரம் டென்னிஸ் சியூ (Dennis Chew) நடித்த விளம்பரம் இணைய விதிகளை மீறவில்லை என்று தகவல்-தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

விளம்பரம் தொடர்பில் இடம்பெற்ற மதிப்பீட்டிற்குப் பிறகு ஆணையம் அவ்வாறு கூறியது.

அந்த விளம்பரம் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இல்லை என்றும், சிறுபான்மையினரைப் புண்படுத்தியதாகவும் ஆணையத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இன, சமய ரீதியான உணர்வுகள் குறித்துக் கவனம் செலுத்தவேண்டியதன் முக்கியத்துவத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று விளம்பரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நினைவூட்டப்பட்டது.

விளம்பர நிறுவனங்கள் அனைத்தும் அத்தகைய விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.

நடத்தை விதிமுறைகள், வழிகாட்டிக் குறிப்புகள் ஆகியவற்றை மீறியதாகத் தெரியவந்தால் ஆணையம் நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று பேச்சாளர் கூறினார்.

வெவ்வேறு இனங்களைப் பிரதிநிதித்து திரு. சியூ வேடம் பூண்டிருந்த அந்த விளம்பரத்தில், இந்தியரைப் பிரதிநிதிக்க பழுப்பு வண்ண முகம் பயன்படுத்தப்பட்டது குறித்து இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அதனையடுத்து, நடிகர் சியூ உட்பட, NETS நிறுவனம், விளம்பரத்தைத் தயாரித்த Havas Worldwide நிறுவனம் எனப் பலதரப்பும் மன்னிப்புக் கேட்டன.




வெவ்வேறு இனங்களைப் பிரதிநிதித்து திரு. சியூ வேடம் பூண்டிருந்த அந்த விளம்பரத்தில், இந்தியரைப் பிரதிநிதிக்க பழுப்பு வண்ண முகம் பயன்படுத்தப்பட்டது குறித்து இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அதனையடுத்து, நடிகர் சியூ உட்பட, NETS நிறுவனம், விளம்பரத்தைத் தயாரித்த Havas Worldwide நிறுவனம் எனப் பலதரப்பும் மன்னிப்புக் கேட்டிருந்தன.

 


Top