Images
  • Hospital

SingHealth மருத்துவ நிலையங்களில் 2020 முதல் மின் மருத்துவ விடுப்புச் சான்றிதழ்கள்

SingHealth மருத்துவ நிலையங்களின் காகித மருத்துவ விடுப்புச் சான்றிதழ்கள் 2020-ஆம் ஆண்டுக்குள் மின்னிலக்கச் சான்றிதழ்களாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DigiMC எனும் புதிய முறையின்கீழ், நோயாளிகள் மின்னிலக்கச் சான்றிதழ்களைப் பெறுவர் என்று GovTech எனும் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு கூறியது.

சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையிலும் தேசிய இதய சிகிச்சை நிலையத்திலும் மின் மருத்துவ விடுப்புச் சான்றிதழ்கள் சோதிக்கப்பட்டன.

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சுமார் 180 நோயாளிகளில் 95 விழுக்காட்டினர் மின்சான்றிதழ் முறை திருப்தி அளிப்பதாகக் கூறினர்.

இருப்பினும், நோயாளிகளுக்குக் காகிதச் சான்றிதழ் தேவைப்பட்டால், அது வழங்கப்படும் என்று அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு கூறியது.

மின் மருத்துவ விடுப்புச் சான்றிதழை எப்படிப் பெறலாம்?

-நோயாளிகள் மின் மருத்துவ விடுப்புச் சான்றிதழின் இணைய முகவரியைக் குறுந்தகவல் வழியாகப் பெறுவர்.
-அவர்கள் முதலாளிகளிடம் அந்த முகவரியை அனுப்பிவைக்கலாம்.
-மின் மருத்துவ விடுப்புச் சான்றிதழைப் பார்க்க, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மறைச்சொல் இருக்கும்.
- அந்த மறைச்சொல் நோயாளிகளின் பிறந்த தேதியாக இருக்கும்.




  

Top