Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Singpass செயலியில் உள்ள மின்னிலக்க அடையாள அட்டையை அரசாங்க அமைப்புகளில் நவம்பர் 1 முதல் பயன்படுத்தலாம்

சிங்கப்பூரில் அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து Singpass செயலியில் உள்ள மின்னிலக்க அடையாள அட்டையைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
Singpass செயலியில் உள்ள மின்னிலக்க அடையாள அட்டையை அரசாங்க அமைப்புகளில் நவம்பர் 1 முதல் பயன்படுத்தலாம்

(படம்: Smart Nation and Digital Government Office)

சிங்கப்பூரில் அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து Singpass செயலியில் உள்ள மின்னிலக்க அடையாள அட்டையைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனி நபர் அடையாளத்தை உறுதி செய்ய, அரசாங்கத்தின் எல்லா அமைப்புகளிலும், ஏனைய அலுவலகங்களிலும் அதனைப் பயன்படுத்தலாம்.

3.2 மில்லியனுக்கும் அதிகமானோர் Singpass செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

தனிநபர் அடையாளம் உறுதி செய்யப்படும் நடைமுறையை மின்னிலக்க அடையாள அட்டை எளிமைப்படுத்துவதாகப் பலரும் கூறுகின்றனர்.

SingHealth பலதுறை மருந்தகங்கள் சென்ற ஆண்டு ஜூலையிலிருந்தே மின்னிலக்க அடையாள அட்டையை நடைமுறைப்படுத்தியுள்ளன.

வருங்காலத்தில், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட மற்ற சான்றுகளும் Singpass செயலியில் சேர்க்கப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்