Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 தடுப்பூசித் திட்டம், மின்னிலக்கக் கடப்பிதழ்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்

சிங்கப்பூரின் தடுப்பூசித் திட்டம், மின்னிலக்கத் தடுப்பூசிக் கடப்பிதழ்கள் ஆகியவை குறித்து வரும் திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். 

வாசிப்புநேரம் -
COVID-19 தடுப்பூசித் திட்டம், மின்னிலக்கக் கடப்பிதழ்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்

(கோப்புப் படம்: Hani Amin/ CNA)

சிங்கப்பூரின் தடுப்பூசித் திட்டம், மின்னிலக்கத் தடுப்பூசிக் கடப்பிதழ்கள் ஆகியவை குறித்து வரும் திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.

மொத்தம் 14 கேள்விகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதன் தொடர்பில் பதிவுசெய்துள்ளனர்.

பதிவுசெய்யப்பட்ட கேள்விகளில் ஒரு சில:

  • குறிப்பிட்ட நேரத்திற்குத் தடுப்பூசி போடப் பதிவுசெய்த ஒருவர் அதற்குச் செல்லாவிட்டல், அவருக்குப் பதிலாக இன்னொருவர் செல்லலாமா? - அதற்கான வரிசை முறையை அமைக்கலாமா?
  • மருத்துவக் காரணங்களினால் தடுப்பூசி பெறமுடியாதோருக்குச் சான்றாக அட்டையோ, கடிதமோ அளிக்கப்படுமா?
  • தடுப்பூசிக் கடப்பிதழ்த் திட்டத்தைப் பற்றிய மேலும் சில விவரங்கள்? வேலைக்காக, குடும்பத்தில் நேர்ந்த இறப்புக்காக, பொழுதுபோக்கிற்காகப் பயணம் செய்ய முற்படுவோருக்குத் தடுப்பூசிக் கடப்பிதழ்த் திட்டத்தின் கீழ் எவ்வாறு அனுமதி அளிக்கப்படும்?

வேலையிடப் பாதுகாப்பு, SingapoRediscovers பற்றுச்சீட்டுகள், போன்றவை குறித்து இதர கேள்விகள் அமைந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் ஐந்து மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அவற்றில் ஒன்று சாலைப் போக்குவரத்துத் திருத்த மசோதா.

- CNA/lk(gs)
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்