Images
  • ncid

COVID-19: 838 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

சிங்கப்பூரில் மேலும் 838 பேர் COVID-19 கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 12,995 பேர் குணமடைந்துள்ளனர்.

798 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலானோர் சீரான நிலையிலோ, குணமடைந்தோ வருகின்றனர். 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மேலும் 16, 650 நோயாளிகள், தனிமைப்படுத்தப்பட்டு சமூகப் பராமரிப்பு வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரில் நேற்று (மே 21) 614 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் 4 பேர் சமூக அளவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30,000ஐக் கடந்துள்ளது.
 

Top