Images
  • sg covid (13)
    (படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் மேலும் 20 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்

சிங்கப்பூரில், மேலும் 20 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அவர்களையும் சேர்த்து இங்கு முழுமையாக உடல் நலம் தேறியோர் எண்ணிக்கை 57, 784.

சமூகத் தனிமைப்படுத்தப்படும் வசதிகளில் 59 பேர் உள்ளனர்.

மருத்துவமனைகளில் 30 பேர் இருக்கின்றனர். அவர்களில் எவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை.

கிருமிப்பரவல் இடமாக அடையாளம் காணப்பட்ட Flora Drive இல் உள்ள Jovell கட்டுமானத் தளத்துடன் தொடர்பில் எந்தவொரு கிருமித்தொற்றுச் சம்பவமும் கடந்த 28 நாள்களில் காணப்படவில்லை.

எனவே அந்த வேலைத்தளம் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில்
கிருமித்தொற்றால் 57,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .

நோய்த்தொற்றால் 28 பேர் மாண்டனர்.

Top