Images
  • Expo Isolation
    (கோப்புப் படம்: Facebook/Singapore Expo)

கிருமிநாசினி தெளிக்கப்படும் கூடங்கள் சிங்கப்பூர் Expo-வில் சோதனை

கிருமிநீக்கம் செய்யும் கூடங்களை பயன்படுத்தும் போக்கு வெளிநாடுகளில் பிரபலமடைந்து வருகிறது.

தற்போது அவை சிங்கப்பூரிலும் சோதிக்கப்பட்டு வருகின்றன.

சிங்கப்பூர் Expo-வில் உள்ள சமூகப் பராமரிப்பு வசதியிலும் அத்தகைய கூடங்களில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சமூகப் பராமரிப்பு வசதிகளில் உள்ள ஊழியர்கள், கண்களைப் பாதுகாக்கும் கண்ணாடிகளையும், முகக் கவசங்களையும் அணிந்து சோதனை மாதிரிகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

அவர்கள் கூடத்துக்குள் செல்லும்போது, அவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

இருப்பினும், அவை காற்றுடன் கலக்கும்போது ஆபத்தை ஏறபடுத்தலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

துமாசிக் அறநிறுவனம், சிங்கப்பூர் தேசியக் கண் நிலையம், ST Engineering Innosparks ஆகியவற்றுடன் இணைந்து கிருமிநாசினியின் அபாயத்தை ஆராய்ந்துவருவதாகத் தெரிவித்துள்ளது.

 

Top