Images
  • SG water
    ( படம்: REUTERS )

விவாதத்திற்குரிய கடற்பகுதிக்குள் கப்பல்களை அனுப்பவேண்டாம் என்ற மலேசியா பரிந்துரையை சிங்கப்பூர் ஏற்க மறுத்துள்ளது: வெளியுறவு அமைச்சு

விவாதத்திற்குரிய கடற்பகுதிக்குள் சிங்கப்பூரும் மலேசியாவும் தங்களது கப்பல்களை அனுப்பவேண்டாம் என்ற மலேசியாவின் பரிந்துரையை சிங்கப்பூர் ஏற்க மறுத்துள்ளது.

இதனை சிங்கப்புர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவிலிருந்து (டிசம்பர் 8) கப்பல்களை அனுப்பவேண்டாம் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லாஅறிக்கை மூலம் பரிந்துரைத்தார்.

எல்லைப் பகுதிகளைப் பற்றி இரு நாடுகளும் முன்வைத்த கருத்துகளின் தொடபில் நடுநிலையாக நடந்துகொள்ள இந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் எல்லைகளைப் பற்றிய விவாதத்திற்குத் தீர்வு காணும் நோக்கில் இம்மாத மத்தியில் சிங்கப்பூருடன் சந்திப்பை நடத்த மலேசியா தயாராக உள்ளதென்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவிற்கான சிங்கப்பூர்த் தூதரின் மூலம் செய்தி அனுப்பப்பட்டது.

துவாஸ் துறைமுக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மலேசியக் கப்பல்களை சிங்கப்பூர் கடல் நீரைவிட்டு வெளியேறுமாறு தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கடுமையாக எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து இந்தப் பரிந்துரையை மலேசியா முன்வைத்தது.

Top