Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'Do Not Call' பதிவகத்தில் மூவாண்டுகளில் சுமார் 47,000 புகார்கள்

2017-ஆம் ஆண்டு முதல் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம், தேவையில்லாத அழைப்புகள், குறுந்தகவல்கள் தொடர்பில் 46,600 புகார்களைப் பெற்றதாக தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -


2017-ஆம் ஆண்டு முதல் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம், தேவையில்லாத அழைப்புகள், குறுந்தகவல்கள் தொடர்பில் 46,600 புகார்களைப் பெற்றதாக தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

அதில் 90 விழுக்காட்டுப் புகார்கள், உரிமம் பெறாமல் கடன்கொடுப்போர், சட்டவிரோத சூதாட்டம் தொடர்பானவை என்றார் அவர். அவை குறித்துக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

தேவையில்லாத அழைப்புகளைத் தவிர்க்க உதவும், DNC எனப்படும் Do Not Call பதிவகத்தில் கடந்த மூவாண்டுகளில் எத்தனை புகார்கள் அளிக்கப்பட்டன, அவற்றுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பன குறித்து தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் கேள்வியெழுப்பினார். அதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்தார் அமைச்சர் ஈஸ்வரன்.

2017 முதல் ஆணையம் அதன் தொடர்பில் சுமார் 1,000 அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

அமலாக்க நடவடிக்கையைப் பொறுத்தவரை, அமைப்பின் செயல் ஏற்படுத்திய விளைவு, அதன்பேரில் கொடுக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

'Do Not Call' விதிமுறைகளை நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா என்பது அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகிறது. தவறுசெய்யும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆணையம் தயங்காது என்றும் அமைச்சர் சொன்னார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்