Images
  • door fire
    படம்: சிங்கப்பூர்க் காவல்துறை 

கடன் முதலைத் துன்புறுத்தல் சம்பவங்கள் - வீடுகளுக்குத் தீ மூட்டியதாக நம்பப்படும் ஆடவர் கைது

கடன் முதலைத் துன்புறுத்தல் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் 30 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெஸ்ட் கோஸ்ட் ரோடு, அங் மோ கியோ அவென்யூ 5 ஆகிய இடங்களில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு கடன் முதலைத் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்துக் காவல்துறையினருக்கு இம்மாதம் 5ஆம் தேதி தகவல் கிடைத்தது.

இரண்டு சம்பவங்களிலும் குடியிருப்பாளர் வசிக்கும் வீட்டின் கதவுகளுக்குத் தீ மூட்டப்பட்டது.

விசாரணைகளைத் தொடர்ந்து ஆடவர் அடையாளங் காணப்பட்டு மறுநாள் கைதுசெய்யப்பட்டார்.

கடன் கொடுப்போர் சட்டத்தின்கீழ் அவர் மீது நாளை குற்றஞ்சாட்டப்படும். 


Top